×

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அத்தியாவசிய இடுபொருட்கள் வழங்கல்

பழநி, நவ. 21: பழநி அருகே ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அத்தியாவசிய இடுபொருட்கள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கணக்கன்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்தி வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் மூலம் மக்காச்சோளத்தில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நடந்தது. ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் திட்ட அலுவலர் சதீஸ்குமார் தலைமை வகித்தார்.

இளநிலை வேளாண் அலுவலர் பாடலீஸ்வரன் வரவேற்றுப் பேசினார். முகாமில் மக்காச்சோளத்தில் உயர் விளைச்சல் சாகுபடி முறைகள், அதற்கான தொழில்நுட்பங்கள், உரநிர்வாகம், களை மேலாண்மை, நீர் மேலாண்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அத்தியவாசிய இடுபொருட்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உர மூட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். உதவி வேளாண் அலுவலர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

The post ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அத்தியாவசிய இடுபொருட்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Palani ,Dindigul District ,Dinakaran ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை